44-ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளன.இதில் உலக நாடுகளை சேர்ந்த பல முக்கிய அணிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற தயாராகி வருகின்றன.இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.இதற்கு முன்பாக செஸ் ஒலிம்பியாட்டிற்காக பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதற்கான ஷூட்டிங் சென்னையில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருடன் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது.இந்த சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022-ற்கான பாடல் மியூசிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையின் ஆஸ்தான நேப்பியர் பாலத்தில் செஸ் வடிவில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இந்த ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.இவர்களுடன் நடிகை அதிதி ஷங்கர் இந்த பாடலில் தோன்றியுள்ளார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்