தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர்,இசையமைப்பாளர் என பன்முக திறமைகள் கொண்டவராக திகழ்ந்து வருபவர் டி ராஜேந்தர்.பல வருடங்களாக தனது ஹிட் படங்கள் மூலம் பல ரசிகர்களை பெற்றவர் டி ராஜேந்தர்.சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு வயிற்றுப்பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது.இதற்கான தீவிர மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் டி ராஜேந்தர்.குடும்பத்தினருடன் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார் டி ராஜேந்தர்.

சிகிச்சை முடிந்து குடும்பத்தினருடன் சில புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகின.இதனை பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.தந்தையின் சிகிச்சை முடிந்ததை அடுத்து சிலம்பரசன் சில வாரங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.டி ராஜேந்தர் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்தார்.

சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த நிலையில் டி ராஜேந்தர் குடும்பத்தினருடன் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.TR பூரண குணமடைந்து சென்னை திரும்பும் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.டி ராஜேந்தரின் சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.