வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தொடரந்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த காளி திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இந்த வரிசையில் அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் தயாராகி உள்ளது.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கௌரி கிஷன், கருணாகரன், சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், GM.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி ஆகியோர் இணைந்து முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸுக்கு சைமன்.K.கிங், வேதங்கள் மற்றும் தரண் குமார் ஆகிய 3 இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். வருகிற ஜூன் 29-ம் தேதி முதல் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் ZEE5 தளத்தில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில காலமாக தமிழ் சினிமா ரசிகர்களும் விரும்பும் வகையிலான புதிய புதிய வெப் சீரிஸ்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. அந்த வரிசையில் அடுத்த ஃபீல் குட் வெப்சீரிஸாக தயாராகியிருக்கும் பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இநநிலையில் பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரெய்லர் இதோ...