தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அமலா பால்.மைனா படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் அமலா பால்.இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்அமலாபால்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருந்தார்

கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்திவிட்டார் அமலா பால்.இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சில anthology படங்களில் நடித்திருந்தார்.

இவர் அடுத்து நடித்துள்ள அதோ அந்த பறவை போல,காடவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களின் ரிலீஸ் கொரோனவால் தள்ளிப்போயுள்ளது.இவற்றை தவிர ஒரு ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.இந்த வெப் சீரிஸ் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

காடவர் படத்தினை அமலா பால் நடித்து தயாரித்துள்ளார்.அனூப் எஸ் பணிக்கர் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு புது போஸ்டருடன் ஹாட்ஸ்டார் வெளியிட்டுளள்னர்.