ஃபகத் பாசிலின் ‘தூமம்’ படப்பிடிப்பில் கார் கவிழ்ந்து விபத்து - படக்குழு வெளியிட்ட பரபரப்பான வீடியோ உள்ளே..

தூமம் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து வைரல் வீடியோ உள்ளே - Thoomam film crew met accident viral video here | Galatta

கடந்த ஆண்டு கன்னட திரையுலகில் இருந்து வெளியாகி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ‘காந்தாரா’. ஏற்கனவே வசூல் வேட்டையை உலகளவில் செய்த கே ஜி எஃப் படத்தையடுத்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாளே பிலிமிஸ் தயாரிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் ரசிகர்களிடம் பெருமளவு வரவேற்பை பெற்றதால் இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்படி காந்தாரா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

அதன்படி இந்தியாவில் கவனிக்கத்தக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஹோம்பாளே பிலிம்ஸ் வளர்ந்துள்ளது. தற்போது கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்களை தயாரித்து வருகின்றனர். தற்போது தமிழில், தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரகு தாத்தா படத்தையும் கே.ஜி.எஃப் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் சலார் படத்தையும் மற்றும் காந்தாரா மூன்றாம் பாகத்தையும் ஹோம்பாளே பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதனிடையே முதல் முறையாக ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மலையாளத்தில் திரைப்படமான ‘தூமம்’ திரைப்படம் வித்யாசமான கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஃபகத் பாசில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்திவ், வினீத் ராத கிருஷ்ணன், அனு மோகன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் முன்னதாக மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தூமம் படப்பிடிப்பில் ஏற்பட்ட கார் விபத்து குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. வீடியோவின் கார் சேஸிங் காட்சியில் கார் தவறுதலாக பள்ளத்தில் விழுந்துள்ளது. விழுந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் நேரவில்லை. பள்ளத்தில் விழுந்த காரை படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கயிறு கட்டி இழுத்து மேலேற்றியுள்ளனர். இந்த சம்பவத்தை படக்குழுவினர் வீடியோவாக தற்போது வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘லூசியா’ , ‘யூடர்ன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் உருவான தூமம் படத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஜெயராம் ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கின்றார். இசையமைப்பாளர் பூர்ணசந்திரா தேஜஸ்ரீ படத்திற்கு இசையமைகின்றார். பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியுள்ள தூமம் திரைப்படம் மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 23 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..

அரண்மனை 3 தோல்வி படமா..? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுந்தர் சி.. – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..
சினிமா

அரண்மனை 3 தோல்வி படமா..? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுந்தர் சி.. – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..

கமல் ஹாசன் முன்னிலையில் மய்யத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. –வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

கமல் ஹாசன் முன்னிலையில் மய்யத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. –வைரலாகும் பதிவு உள்ளே..