புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..

புற்றுநோயால் இறந்த படிக்காதவன் பட நடிகர் விவரம் உள்ளே - padikadhavan movie fame Prabhu died in cancer | Galatta

கடந்த சில நாட்களாக திரைபிரபலங்களின் உயிரிழப்பு ரசிகர்களையும் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. எஸ் பி பாலசுப்பிரமணியம் தொடங்கி விவேக், மயில் சாமி, மனோ பாலா என்று அடுத்தடுத்த உயிரிழப்பு திரையுலகினருக்கு பெரும் இழப்பாகவே அமைகிறது. அதிலும் கொரோனா காலத்திற்கு பின் தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் பலரது வாழ்வியல் கேள்விக்குறியாகி பலர் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இறந்து போவது வேதனைக்குரியது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த படிக்காதவன் பட புகழ் பிரபு என்பவர் புற்றுநோயால் இறந்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கடந்த 2009 ல் வெளியான திரைப்படம் ‘படிக்காதவன்’ ரசிகர்களுக்கு நெருக்கமான திரைப்படமாக இன்று வரை இருந்து வரும் இப்படத்தில் காட்சிகள் பலர் அவ்வளவு எளிதாக மறந்திட முடியாது. அதே போல் கதாபாத்திரங்களையும் மறந்திட முடியாது. அதன்படி அப்படத்தில் தனுஷ் அவர்களின் தங்கையை பெண் பார்க்கும் காட்சி இன்றும் தொலைகாட்சியில் ஒளிப்பரபினால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதில் தனுஷ் அவர்களின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக நடித்து இன்று வரை ரசிகர்களால் இப்படம் மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் நிறையை பட வாய்ப்புகள் வந்த போது அதிலிருந்து வந்த பணத்தை மது, புகையிலை போன்ற தீய பழக்கத்தில் செலவு செய்து அதில் அடிமையாகியுள்ளார். இதன் விளைவாக அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அதனை அப்படியே விட புற்றுநோய் முற்றி அவர் உடல் மேலிந்துள்ளார். திரையுலகில் பல முக்கிய பிரபலங்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தும் அவர்களிடம் உதவி கேட்க தயங்கியுள்ளார். ஆள் அடையாளமே தெரியாத இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தவித்து இருந்தார். எதேச்சையாக ஒருவரால் இவர் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு இவரது நிலை கண்டு ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இதையறிந்து இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் பிரபுவின் மருத்துவ செலவுகளை செய்து வந்தார். இருந்தாலும் புற்றுநோயின் தீவிரத்தால்   நடிகர் பிரபு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 14) உயிரிழந்துள்ளார்.

siddharth open up about jil jung juk movie watch exclusive interview here

இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். பிரபுவின் உடலுக்கு இசையமைப்பாளர் டி இமான் இறுதி சடங்கு செய்து அவரது உடலை தகனம் செய்து உள்ளார். இமானின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

siddharth open up about jil jung juk movie watch exclusive interview here

மேலும் இறந்த பிரபுவிற்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீவிர புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நடிகர் பிரபுவை காப்பாற்ற மருத்துவர், செவிலியர், சமூக ஆர்வலர் தங்கள் முடிந்ததை செய்தனர். இருந்தும் முடியவில்லை. ஆழ்ந்த இரங்கல் சகோதரா..”   என்று குறிப்பிட்டுள்ளார்.

Actor Prabhu (Padikkathavan and Numerous other films) is no more with us. He had suffered from stage 4 cancer.
And Ascended to the other world this morning.Doctors,nurses,social activists tried their level best to retrieve him.But couldn’t.
Rest In peace brother. My heartfelt… pic.twitter.com/2Yu74ZDieN

— D.IMMAN (@immancomposer) June 14, 2023

மறைந்த நடிகர் பிரபு அவர்கள் இறப்பதற்கு முன் அவரது புற்றுநோய் குறித்தும் அவரது நிலை குறித்தும் நமது கலாட்டா வாய்ஸ் சேனலில் பேசிய வீடியோவை காண..

கமல் ஹாசன் முன்னிலையில் மய்யத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. –வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

கமல் ஹாசன் முன்னிலையில் மய்யத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. –வைரலாகும் பதிவு உள்ளே..

தனுஷ் படத்தில் நடிப்பது குறித்து விளக்கம்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்.. – வைரல் பதிவு உள்ளே..
சினிமா

தனுஷ் படத்தில் நடிப்பது குறித்து விளக்கம்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்.. – வைரல் பதிவு உள்ளே..

“பொறுப்புள்ள மனிதனாக என் கடமைகளை செய்து வருகிறேன்” நெகிழ்ந்த ஜிவி பிரகாஷ் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“பொறுப்புள்ள மனிதனாக என் கடமைகளை செய்து வருகிறேன்” நெகிழ்ந்த ஜிவி பிரகாஷ் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..