தளபதி விஜயின் ‘வாரிசு’ வெற்றியையடுத்து முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.. – வைரலாகும் அப்டேட் இதோ..

வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த முக்கிய திரைப்படம் விவரம் உள்ளே - varisu producer dil raju next movie with vijay devarakonda | Galatta

இந்த ஆண்டு தென்னிந்தியாவில் மிகப்பெரிய வசூல் குவித்த திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ‘வாரிசு’ . தளபதி விஜய் நடிப்பில் குடும்பங்களின் உணர்வுகளை மையப்படுத்தி உருவான வாரிசு படத்தினை ரசிகர்கள் பெருமளவு வரவேற்று அப்படத்தை வெற்றி பெற செய்தனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்த இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் உலகளவில் ரூ 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் தில் ராஜு படங்கள் மீது தனி கவனம் எழுந்துள்ளது. இப்படத்தையடுத்து தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பைலிங்குவலாக உருவாகும் ‘கேம் சென்ஞர்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோவுடன் தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. அதன்படி தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பின் தமிழ், இந்தி என்று பல மொழி ரசிகர்களை தன் நடிப்பினால் கவர்ந்து இழுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்கும் விஜய் தேவரகொண்டா அவர்கள் நடிக்கவிருக்கும் புது படத்தை தயாரிக்கவுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.

கடந்த 2018 ம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’. தெலுங்கு மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரை இப்படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ பாடல் டிரெண்ட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் வெற்றி பயணத்தில் முக்கிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கீதா கோவிந்தம் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படைத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தின் நடிகை மிருனாள் தாகூர் நடிக்கவுள்ளார்.  மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தின் படபூஜை சமீபத்தில் நடைபெற்றது அந்நிகழ்வின் சிறப்பு தொகுப்பினை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களால் இணையத்தில் பட பூஜை வீடியோ வைரலாகி வருகிறது.

 

The much awaited collaboration of THE #VijayDeverakonda, @parasurampetla, & @svc_official’s #VD13 is officially launched today.

The talented @mrunal0801 joins the stellar cast.

Shoot begins soon.#SVC54@Thedeverakonda#KUMohanan @GopiSundarOffl #VasuVarma #DilRaju #Shirish pic.twitter.com/ZzOfigIvme

— Sri Venkateswara Creations (@SVC_official) June 14, 2023

விஜய் தேவரகொண்டாவின் முந்தைய திரைப்படமான ‘லைகர்’ பான் இந்திய அளவு வெளியானாலும் அதற்கான வரவேற்பு கிடைக்கவில்லை. பெரும் தோல்வியையடுத்து தற்போது விஜய் தேவரகொண்டா ‘குஷி’ என்ற படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Pooja :)

Parasuram - Dil Raju- Mrunal Thakur & your Man ❤️#VD13 pic.twitter.com/BMWJlGUocd

— Vijay Deverakonda (@TheDeverakonda) June 14, 2023

அரண்மனை 3 தோல்வி படமா..? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுந்தர் சி.. – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..
சினிமா

அரண்மனை 3 தோல்வி படமா..? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுந்தர் சி.. – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..

கமல் ஹாசன் முன்னிலையில் மய்யத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. –வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

கமல் ஹாசன் முன்னிலையில் மய்யத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. –வைரலாகும் பதிவு உள்ளே..

தனுஷ் படத்தில் நடிப்பது குறித்து விளக்கம்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்.. – வைரல் பதிவு உள்ளே..
சினிமா

தனுஷ் படத்தில் நடிப்பது குறித்து விளக்கம்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்.. – வைரல் பதிவு உள்ளே..