தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக நடித்து ஆகச் சிறந்த நடிகராக ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்  கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 21ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, நடிகர் சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், எழுத்தாளராக தனுஷ் திரைக்கதை வசனங்களை எழுதி ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் நானே வருவேன் படத்தில் நடிகை இந்துஜா, பிரபு, யோகி பாபு, ஷெல்லி கிஷோர் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய,பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ள நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நானே ஒருவன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் இயக்குனர் செல்வராகவனை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் இதோ…
 

#NaaneVaruvean producer #KalaippuliSThanu sir felicitates director @selvaraghavan with a garland, for success of the film@dhanushkraja @theVcreations @thisisysr pic.twitter.com/e09Dtzj1kG

— Sathish Kumar M (@sathishmsk) September 30, 2022