மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இந்திய அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2022) வரிசையாக அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் முதல்முறை இயக்குனராக களமிறங்கிய ஹே சினாமிகா, காவல்துறை அதிகாரியாக சல்யூட் ஆகிய படங்களில் கலக்கிய துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்து சமீபத்தில் வெளிவந்த சீதா ராமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

கடைசியாக இயக்குனர் பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் த்ரில்லர் படமாக துல்கர் நடித்த சுப்- ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் திரைப்படமும் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கவனத்தை ஈர்த்தது. முன்னதாக பேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் துல்கர் நடித்துள்ள கன்ஸ் & குலாப் வெப்சீரிஸ் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் நடிக்கும் திரைப்படம் கிங் ஆப் கோத்தா. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். தினங்களுக்கு முன்பு கிங் ஆப் கோத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், நாளை அக்டோபர் 1ஆம் தேதி கிங் ஆப் கோத்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Comin in hot ! #FirstLookKOK #LetsGetThisShowOnTheRoad #AnotherOne #ThisOnesSpecial #Homecoming #HomeTurf pic.twitter.com/yuX8U1i3qX

— Dulquer Salmaan (@dulQuer) September 30, 2022