இந்திய சினிமாவின் உயரிய விருதாக தேசிய திரைப்பட விருதுகள் வருடா வருடம் கலைஞர்களை கௌரவப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகளுக்காக இந்தியாவை சேர்ந்த பன்மொழி திரைப்படங்களும் கலைஞர்களும் தங்களது படைப்புகளை சமர்ப்பிக்க, அதிலிருந்து சிறந்த கலைஞர்களும் படைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை சூரரைப்போற்று திரைப்படத்திற்காக பெறுவதாக அறிவிக்கப்பட்டது. சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த முறை தமிழ் திரையுலகில் இருந்து,
சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் 
சிறந்த பின்னணி இசை - ஜீ வி பிரகாஷ் குமார் ( சூரரைப் போற்று ) 
சிறந்த படத்தொகுப்பு  - ஸ்ரீகர் பிரசாத் ( சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ) 
சிறந்த திரைக்கதை  - ஷாலினி உஷா நாயர் , சுதா கொங்கரா( சூரரைப் போற்று ) 
சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ( சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ) 
சிறந்த படம் - சூரரைப் போற்று 
சிறந்த வசனம் - மடோன் அஷ்வின் ( மண்டேலா ) 
சிறந்த அறிமுக இயக்குனர் - மடோன் அஷ்வின் ( மண்டேலா )  
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி ( சூரரைப் போற்று ) 
சிறந்த நடிகர் - சூர்யா ( சூரரைப் போற்று )
ஆகியோர் விருதுகளையும் வென்றுள்ளனர். தேசிய திரைப்பட விருது விழாவில் தமிழ் நட்சத்திரங்கள் விருதுகளை அள்ளிய அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…