"ஏஜென்ட் விக்ரம் X லியோ தாஸ்"- உலக நாயகனின் பிறந்தநாளில் ட்ரெண்டாகும் கமல்ஹாசன் - தளபதி விஜயின் புகைப்படம் இதோ!

ட்ரெண்டாகும் உலக நாயகன் கமல்ஹாசன் - தளபதி விஜயின் புகைப்படம்,thalapathy vijay ulaganayagan kamalhaasan latest photo | Galatta

இன்று நவம்பர் 7ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளில் தளபதி விஜய் - கமல்ஹாசனோடு இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமாவில் ஆண்டவராக தொடர்ந்து ரசிகர்களின் ரசனையை மெருகேற்றி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசனோடு தளபதி விஜய் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. இந்த புகைப்படத்தை ஏஜென்ட் விக்ரம் உடன் லியோதாஸ் என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த லியோ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் இடம் பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விக்ரம் படங்களின் வரிசையில் லியோ திரைப்படமும் LCUவில் இடம் பெற்றிருப்பதால் அதன் தொடர்ச்சியாக லியோ திரைப்படத்தின் இறுதியில் விக்ரம் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் இடம் பெற்றது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. இந்த இமாலய வெற்றியை தொடர்ந்தது தளபதி விஜய் தனது 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 படத்தில் தற்போது நடித்து வருகிறார். முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நவம்பர் 6ஆம் தேதி தளபதி 68 திரைப்படத்திற்கான அதிரடி ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் தனது விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இணைந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் THUG LIFE படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நேற்று நவம்பர் 6ஆம் தேதி வெளிவந்த THUG LIFE படத்தின் அறிவிப்பு டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் கல்கி 2898AD படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் உலகநாயகன் அடுத்ததாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தயாராகும் KH233 திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

AGENT VIKRAM x LEO 🔥#UlagaNayagan @ikamalhaasan @actorvijay #ThalapathyVijay #Ulaganayagan #KamalHassan #LeoFilm #HBDUlaganayagan #HBDKamalHaasan #Galatta pic.twitter.com/LV9h2CRrEx

— Galatta Media (@galattadotcom) November 7, 2023