உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்: ஸ்பெஷல் வாழ்த்துக் கூறிய லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய புகைப்படம் இதோ!

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்,lokesh kanagaraj shared birthday wishes to kamalhaasan | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் இன்று நவம்பர் 7ஆம் தேதி தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கலைஞானியாக என்றென்றும் மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த X பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலக நாயகன் கமல்ஹாசன் சார்... தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருங்கள்" எனக் குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டு இருக்கிறார். அவர் பகிர்ந்த அந்த புதிய புகைப்படம் இதோ...

கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து உலகநாயகன் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் THUG LIFE திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் நேற்று நவம்பர் 6ஆம் தேதி வெளிவந்து எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளோடு வந்த இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம்போல் இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் THUG LIFE திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடல் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 3ம் தேதி வெளிவந்த இந்தியன் 2 படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் விரைவில் ரிலீஸ் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் கல்கி 2898AD படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது 233 வது திரைப்படமாக உருவாகும் KH233 திரைப்படத்தில் இயக்குனர் H.வினோத் உடன் உலகநாயகன் கைகோர்க்கிறார். இந்த KH233 படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உலக நாயகன் தொடங்கிய “தலைவன் இருக்கின்றான்” திரைப்படத்தின் தலைப்பை இப்படத்திற்கு வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
 

Happy Birthday #Ulaganayagan @ikamalhaasan sir🙏🏻 ❤️❤️❤️
Keep inspiring us forever 🤗❤️🙏🏻 pic.twitter.com/93yWSQbb6d

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 7, 2023