"நியாயமே இல்ல... TARGET-பண்ணிருக்காங்க!"- பிக் பாஸ்ஸில் பிரதீப் ஆண்டனிக்கு கொடுத்த RED CARD பற்றி பேசிய VJ மகேஸ்வரி! ட்ரெண்டிங் வீடியோ

பிக் பாஸ்ஸில் பிரதீப் ஆண்டனிக்கு கொடுத்த RED CARD பற்றி பேசிய VJ மகேஸ்வரி,vj maheshwari about pradeep antony red card eviction from biggboss | Galatta

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணமாக, “அனைவரையும் மரியாதை இல்லாமல் பேசுகிறார்”, “பெண்களை தர குறைவாக பேசுகிறார்”, “கெட்ட வார்த்தை பேசுகிறார்”, “பெண்கள் பாதுகாப்பு” என பல்வேறு விதமான விமர்சனங்கள் பிரதீப் ஆண்டனி மீது வைக்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டதில் பெரும்பான்மையானோர் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என தெரிவித்ததால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு கூடி வருகிறது. ஆரம்பம் முதலே பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தற்போது பிரதீப் வெளியேறிய பிறகு போட்டியாளர்கள் என்னெல்லாம் குற்றச்சாட்டுகள் கூறினார்களோ அந்த தருணத்தில் நடந்த விஷயங்களை வீடியோ பதிவுகளாக எடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய விஜே மகேஸ்வரி நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டி கொடுத்த போது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது சரியா? தவறா?" எனக் கேட்டபோது, "அது நியாயமற்றது என்று தான் நான் நினைக்கிறேன்.” என்றார். தொடர்ந்து அவரிடம், "உங்களுடைய சீசனில் அசீம்… அவரும் நிறைய மரியாதை குறைவாக பேசி இருக்கிறார். இத்தனைக்கும் நிகழ்ச்சி முழுக்க பேசி டைட்டிலும் ஜெயித்திருக்கிறார். இப்போது பிரதீப் ஆண்டனி சில விஷயங்கள் செய்திருக்கிறார் ரெட் கார்ட் இதை எப்படி பார்க்கிறீர்கள்?" என கேட்டபோது, “இதை மிகவும் நியாயமற்றதாக பார்க்கிறேன் இது தவறாக கையாளப்பட்டதாக பார்க்கிறேன். இது ஒரு தவறான பிஹேவியர் இது பண்ணியிருக்கவே கூடாது நடந்திருக்கவே கூடாது என்றால் இது எந்த சீசனிலுமே நடந்து இருக்க கூடாது சரியோ தவரோ ஒரு நபர் அதற்கான வாய்ப்பை பெறுகிறார் என்றால் ஒரு நபர் அதற்கான வாய்ப்பை பெற்று பெற்று அவரை கடைசி வரை வர விட்டு இருக்கிறீர்கள் என்றால் இங்கு எல்லோருக்குமே வாய்ப்பு இருக்கிறது. இங்கு எல்லாருக்குமே வாய்ப்பு சமமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். திடீரென இது சரி மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்கிறீர்கள். அடுத்த முறை நாங்கள் முடிவெடுத்து விட்டோம் இது தவறு என்கிறீர்கள். எனவே இது நியாயமற்றது.” என்றார்

“மேலும் பெண்கள் பாதுகாப்பு என்ற ஒரு காரணத்தை பொதுவாக வைத்து மனரீதியாக அவருக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிவித்து குறி வைத்து பிரதீப் ஆண்டனிக்கு இந்த ரெட் கார்ட் கொடுக்க ஹவுஸ் மேட்சுகள் ஒன்றிணைந்தார்களா?” என கேட்டபோது, “ஆமாம் இது குறிவைத்து செய்யப்பட்டது தான் குறி வைத்து தான் செய்திருக்கிறார்கள் ஆனால் யாருடைய நன்மைக்காக இப்படி குறி வைத்து செய்தார்கள் என்று தெரியும் எதற்காக இப்படி செய்வதற்கு பெண்கள் பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்தார்கள் என்றும் தெரியவில்லை அதற்கு வேறு சில காரணங்களும் இருந்திருக்கலாம் ஆனால் பெண்கள் பாதுகாப்பு என எடுத்தது மிகவும் தவறானது அது சரி என எனக்கு தோன்றவில்லை” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட வி ஜே மகேஸ்வரி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.