நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் தொடர்ந்து தங்களது படைப்புகளின் வாயிலாக ஓட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து முதல் முறை நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜிகர்தண்டா DOUBLEX. ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதன் இரண்டாவது பாகமாக தற்போது உருவாக்கி இருக்கும் இந்த ஜிகர்தண்டா DOUBLEX திரைப்படம் வருகிற தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்படி பேசும் போது தமிழ் சினிமாவில் அல்லது இந்திய சினிமாவில் இருந்த நிறப் பாகுபாடு குறித்து ராகவா லாரன்ஸ் அவர்களிடம் கேட்டபோது தனது திரைப்படத்தின் அனுபவத்திலிருந்து பதில் அளித்தார்.
அந்த வகையில் “இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் குறிப்பிட்டிருந்தார் முதலில் அந்த மேக்கப் எல்லாம் எடுத்து விடுங்கள். நமக்கு அந்த கருப்பு ஹீரோ தான் வேண்டும் என்கிற ஒரு விஷயம்... ட்ரெய்லரில் கூட "முதல் கருப்பு ஹீரோ?" என வருகிறது. இதை பார்க்கும் போது எங்களுக்கு தெரிந்த முதல் கருப்புக்கு ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.. அடுத்து உங்களையும் அப்படி சொல்கிறார்கள்... இதை நாம் ஒரு பாகுபாடாகவும் பார்க்கலாம். நிறத்தை வைத்து ஒரு பாகுபாடு பார்க்கிறார்கள்.. இது பற்றி உங்களுடைய அனுபவம் என்ன?” எனக் கேட்ட போது,
“இருந்திருக்கிறது எனது வாழ்க்கையிலும் இருந்திருக்கிறது. அதை உடைத்தது தலைவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) தான். அந்த காலத்தில் ஒரு கருப்பு நடிகர் கூட ஹீரோவாகி அதுவும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் என்ற ரேஞ்சுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது. நாமெல்லாம் சினிமாவுக்கு போகிறோம் என்றால் ஆமாம் ஒரு பெரிய எம்ஜிஆர் , கமல் அப்படி எல்லாம் சொல்லுவார்கள். அந்த காலகட்டம் எல்லாம் இருந்தது. குரூப் டான்ஸராக இருந்த காலகட்டத்தில் கூட "கண்ணா கொஞ்சம் கருப்பாக இருக்கிறாய் சிகப்பாக இருப்பவன் கொஞ்சம் முன்னாடி வா கண்ணா நீ பின்னாடி போ" என இருந்தது. அதெல்லாம் பிரபுதேவா மாஸ்டர் வருவதற்கு முன்புதான் பிரபுதேவா மாஸ்டர் வந்த பிறகு திறமையை மட்டும் தான் அவர் முன்னாடி கூப்பிடுவார். அந்த காலகட்டம் வரைக்கும் அதெல்லாம் இருந்தது. நானே அனுபவித்து இருக்கிறேன். அப்படி அனுபவித்து விட்டு இந்த படத்தில் வந்து முதல் கருப்பு ஹீரோ என வந்து டயலாக் பேசும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதேபோல் நாம் அரக்கன் எஸ்.ஜே.சூர்யா என்னை பார்க்கும் போது, “ப்ளாக் மண்ணின் மைந்தன் ரொம்ப நல்லா இருக்கு?” என சொன்னார் அதை படத்தில் வைத்துவிட்டார்கள்." என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸ் & எஸ்.ஜே.சூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.