'அறம்' இயக்குனர் கோபி நயனாரின் கம்பேக் பட டைட்டில் அறிவிப்பு... முன்னணி வேடங்களில் ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ்! விவரம் உள்ளே

அறம் கோபி நாயனார் - ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் ராஜேஷின் கருப்பர் நகரம்,aramm gopi nainar jai aishwarya rajiesh movie titled karuppar nagaram | Galatta

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘அறம்’ படத்தின் இயக்குனர் கோபி நயனார் இயக்கும் அடுத்த புதிய திரைப்படத்தின் டைட்டில் இன்று நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அறம் படத்தின் இயக்குனர் கோபி நயனார் அடுத்து இயக்கும் புதிய படத்தின் டைட்டிலை தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார். இந்த புதிய படத்திற்கு "கருப்பர் நகரம்" என பெயரிடப்பட்டுள்ளது. ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் (சர்வம், தெனாவட்டு உள்ளிட்ட படங்களில் நடித்த) பிரபல தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் "கருப்பர் நகரம்" திரைப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் ஈஸ்வரி ராவ் ஜான் விஜய் ஸ்ரீஜித் ரவி சுப்பிரமணியம் பஞ்சு அருணாச்சலம் டேனியல் போப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் கோபி நயனார் உடன் நடிகர் ஜெய் இணையும் இந்த கருப்பர் நகரம் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது ஆனால் அதன் பிறகு எந்த விதமான அறிவிப்பும் இல்லாத நிலையில் தற்போது இந்த படம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னையை மையப்படுத்தி கால்பந்து விளையாட்டை அடித்தளமாக கொண்டு நகரும் கதைக்களத்தில் உருவாகும் இந்த கருப்பர் நகரம் திரைப்படம் அறம் திரைப்படத்தை போன்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் NK.ஏகாம்பரம் அவர்களின் ஒளிப்பதிவில் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்யும் இந்த கருப்பர் நகரம் திரைப்படத்திற்கு கே.எஸ்.பிரசாத் இசையமைக்கிறார். கருப்பர் நகரம் திரைப்படத்தின் டைட்டில் இன்று நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளை நவம்பர் 8ம் தேதி மாலை 5 மணி அளவில் நடிகர் ஆர்யா கருப்பர் நகரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பர் நகரம் படத்தின் டைட்டில் அறிவிப்பு இதோ:

Happy to release #GopiNainar 's next flick title #KarupparNagaram starring my Thambi @Actor_Jai @aishu_dil #JDChakravarthy. Best wishes to the whole Team 🎉

Prod by R Ramesh's @RrFilmmakers & Hemant Raj 's #AGL @ThenandalFilms @venkate25571670 #EswariRao #JohnVijaypic.twitter.com/MF2kqxPPfI

— venkat prabhu (@vp_offl) November 7, 2023

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த தீராக் காதல் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் , கருப்பர் நகரம் படத்தில் இணைந்து இருக்கின்றனர். வரும் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10ஆம் தேதி ஜெய் நடித்துள்ள லேபிள் வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் காலத்தில் வெளிவர இருக்கிறது. முன்னதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளிவர இருக்கும் அன்னபூரணி திரைப்படத்திலும் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் புலிமடா எனும் படம் வெளிவந்த நிலையில் தொடர்ந்து ஹெர் மற்றும் அஜயன்டே ரண்டாம் மோக்ஷனம் என்ற இரண்டு மலையாள படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. தொடர்ந்து தமிழில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்திருக்கும் மோகன்தாஸ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து நடித்திருக்கும் தீயவர் குலைகள் நடுங்க ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.