தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்கு மாலை அணிவித்து பாராட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய்... காரணம் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே

தளபதி விஜய் மகளுக்காக வந்து நின்ற அவரது மகனின் ஸ்பெஷல் வீடியோ,Thalapathy vijay son jason sanjay at daughter sasha convocation | Galatta

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நட்சத்திர நாயகராக திகழும் தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்காக உடன் நின்ற அவரது மகன் ஜேசன் சஞ்சய் அண்ணனாக மேடை ஏறி பாராட்டி இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக திகழும் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். தளபதி 68 திரைப்படம் குறித்த இதர அதிரடி அறிவிப்புகள் எல்லாம் லியோ திரைப்படத்திற்கு பிறகு தான் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி லியோ திரைப்படத்திற்காக இணைந்திருக்கிறது. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி லியோ திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCU என்ற யுனிவர்சல் லியோ திரைப்படம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது. தற்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக கடந்த 1999 ஆம் ஆண்டு தளபதி விஜய் சங்கீதா அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேசம் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். முன்னதாக கல்லூரி படிப்பை நிறைவு செய்த ஜென் சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு அதற்காக முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு படியாக குறும்படங்களையும் சஞ்சய் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தளபதி உச்சியின் மகள் திவ்யா ஷாஷா தற்போது தனது பள்ளி படிப்பை நிறைவு செய்து இருக்கிறார். இதனை அடுத்து அவரது பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அண்ணனாக உடன் நின்ற சஞ்சய் மாலை அணிவித்து தனது தங்கையை பாராட்டியிருக்கிறார். தளபதி விஜயின் மகனும் மகளும் சஞ்சய் சாஷாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

விறுவிறுப்பான கட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2... ஷூட்டிங் குறித்து முக்கிய பிரபலம் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

விறுவிறுப்பான கட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2... ஷூட்டிங் குறித்து முக்கிய பிரபலம் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்த மிஷ்கின்... என்ன படம் தெரியுமா? முதல் அதிகாரப்பூர் அறிவிப்பு இதோ!
சினிமா

இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்த மிஷ்கின்... என்ன படம் தெரியுமா? முதல் அதிகாரப்பூர் அறிவிப்பு இதோ!

மான்ஸ்டர் வெற்றிக்கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு! விவரம் உள்ளே
சினிமா

மான்ஸ்டர் வெற்றிக்கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு! விவரம் உள்ளே