ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட புது ப்ரோமோ,arya in kathar basha endra muthuramalingam movie new promo out now | Galatta

ஆர்யா நடிப்பில் நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக வெளிவர இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் ரொமான்டிக்கான புது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது.  தனக்கென தனி பாணியில் தொடர்ந்து பல விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா  அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில்  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை மையப்படுத்தி ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றி கூட்டணி சார்பட்டா 2 படத்தில் இணைகிறது. சமீபத்தில் சார்பட்டா 2 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதனை அடுத்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராக இருக்கும் சங்கமித்ரா படத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி இயக்கத் திட்டமிட்டிருந்த சங்கமித்ரா திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது அத்திரைப்படத்தை மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி கையில் எடுத்திருக்கிறார். விஷால் மற்றும் ஆர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கும் சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Mr.X படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இதனிடையே தனது கொம்பன், மருது, விருமன் வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் முதல்முறையாக ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற வெள்ளிக் கிழமை ஜூன் இரண்டாம் தேதி காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள கறி குழம்பு வாசம் பாடலின் புதிய புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்த மிஷ்கின்... என்ன படம் தெரியுமா? முதல் அதிகாரப்பூர் அறிவிப்பு இதோ!
சினிமா

இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்த மிஷ்கின்... என்ன படம் தெரியுமா? முதல் அதிகாரப்பூர் அறிவிப்பு இதோ!

மான்ஸ்டர் வெற்றிக்கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு! விவரம் உள்ளே
சினிமா

மான்ஸ்டர் வெற்றிக்கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு! விவரம் உள்ளே

தனுஷின் பக்கா ஆக்சன் ட்ரீட் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த வில்லன் நடிகர்! அதிரடியான அப்டேட் இதோ
சினிமா

தனுஷின் பக்கா ஆக்சன் ட்ரீட் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த வில்லன் நடிகர்! அதிரடியான அப்டேட் இதோ