விடாமுயற்சியுடன் அஜித் மகன் பயிற்சி... தனி ரூட்டில் பயணிக்கும் ஆத்விக்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ.

அஜித் மகன் ஆத்விக் கால்பந்து பயிற்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் -  Ajith kumar son aadvik playing football | Galatta

தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தக்க வைத்து பாக்ஸ் ஆபிஸில் படத்திற்கு படம் சாதனை படைத்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் விடுமுறையையொட்டி வெளியான திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த அஜித் குமார் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக துணிவு வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் அஜித் குமாரின் 62 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிபதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கவுள்ளார். வரும் ஜூன் மாதம் இறுதியில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அஜித் குமார் தன் வாழ்நாள் கனவு பயணமான ‘பரஸ்பர மரியாதைக்கான பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொண்டார். இதன் இரண்டாவது கட்ட பயணத்தில் நேபாளம் போன்ற மாநிலங்களின் பகுதிகளில் அஜித் குமார் பயணம் மேற்கொண்டு முடித்துள்ளார். மேலும் அஜித் குமார் AK MOTOR RIDE என்ற இரு சக்கர வாகன சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

திரைப்படம் தாண்டி அஜித் குமார் பல் துறையில் சிறந்து விளங்குபவர். அதில் குறிப்பாக பைக் பயணம். ஆரம்பத்தில் இருந்தே பைக் ரேஸ், கார் ரேஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டவர். அதில் அதீத ஆர்வம் கொண்டவர். மேலும் பைக்கில் தைரியாமாக பல சவாலான காட்சிகளையும் துணிச்சலாக செய்ய கூடியவர் அஜித் குமார். பைக் மீதான இவரது நாட்டம் உலக பயணம் முதல் தற்போது தொடங்கியுள்ள பைக் சுற்றுலா நிறுவனம் வரை நீடித்து கொண்டே இருக்கின்றது.

prabhu deva next to be malayalam film maker here is the viral first look

இந்நிலையில் அஜித் குமார் நடிகை ஷாலினி தம்பதியரின் மகன் ஆத்விக் கால்பந்து பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை கால்பந்து கிளப் (chennaiyin FC) குழுவில் ஜூனியர் பிரிவில் தற்போது ஆத்விக் அஜித் குமார் விளையாடி வருகிறார். அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை ஆத்விக் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

prabhu deva next to be malayalam film maker here is the viral first look

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் சஞ்சீவ்..? – நடிகை பிரித்தி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..  Exclusive interview இதோ..
சினிமா

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் சஞ்சீவ்..? – நடிகை பிரித்தி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. Exclusive interview இதோ..

பேருந்து விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு.. அதிர்ச்சியில் திரையுலகம்.. – முழு விவரம் உள்ளே..
சினிமா

பேருந்து விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு.. அதிர்ச்சியில் திரையுலகம்.. – முழு விவரம் உள்ளே..

ஜீப் பறக்க பீடியை பற்ற வைத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. - அதிரடியான 'SSMB28' படத்தின் டைட்டில் வீடியோ இதோ..
சினிமா

ஜீப் பறக்க பீடியை பற்ற வைத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. - அதிரடியான 'SSMB28' படத்தின் டைட்டில் வீடியோ இதோ..