மான்ஸ்டர் வெற்றிக்கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு! விவரம் உள்ளே

எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படம் ரிலீஸ் குறித்த தகவல்,Sj suryah priya bhavani shankar radha mohan bommai movie release update | Galatta

தமிழ் சினிமாவின் தனி சிறப்பு மிக்க இயக்குனராகவும் தேர்ந்த நடிகராகவும் திகழும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள்  தனது மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்த பொம்மை திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. இயக்குனராக அஜித்குமாரின் வாலி, தளபதி விஜயின் குஷி ஆகிய படங்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்த எஸ்.ஜே.சூர்யா தானே கதாநாயகனாக நடித்த நியூ , அன்பே ஆருயிரே மற்றும் இசை ஆகிய படங்களையும் இயக்கினார். தொடர்ந்து நடிகராக ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கென தனி பாணியில் மிகச் சிறப்பாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஸ்பைடர், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து நேரடியாக ரசிகர்களின் இதயங்களில் பதிந்தவர்.

அந்த வகையில் அடுத்ததாக விஷாலுடன் இணைந்து வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் கலக்கி இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த தீபாவளி வெளியிட ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடமையை செய். 

இதனிடையே எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் திரைப்படம் தான் பொம்மை. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா & பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் நிலையில், நாளை ஜூன் 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு பொம்மை திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பொம்மை ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
 

#BOMMAI gearing up for release🥰🥰🥰🥰🥰🥰 Update tomorrow 6pm👍👍👍stay tuned 💐💐💐💐💐🙏sjs

— S J Suryah (@iam_SJSuryah) May 31, 2023

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரமான வீரன் படத்தின் கதை இது தானா? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல் இதோ!
சினிமா

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரமான வீரன் படத்தின் கதை இது தானா? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல் இதோ!

சச்சின் ANTHEMக்கு பின் மீண்டும் இணைந்த தனுஷ் - அனுஷ்கா காம்போ... ரசிகர்களை  உற்சாகப்படுத்திய புது பாடல் இதோ!
சினிமா

சச்சின் ANTHEMக்கு பின் மீண்டும் இணைந்த தனுஷ் - அனுஷ்கா காம்போ... ரசிகர்களை  உற்சாகப்படுத்திய புது பாடல் இதோ!

வேகமெடுக்கும் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்... ஜீவி பிரகாஷ் குமாரின் அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்... ஜீவி பிரகாஷ் குமாரின் அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!