பல கோடி சினிமா ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஃபேவரட் ஹீரோவாகவும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகனாகவும் திகழும் தளபதி விஜய் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்குகிறார். அந்தவகையில் அடுத்ததாக பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்க தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நேற்று (ஏப்ரல் 2-ம் தேதி) மாலை வெளிவந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு படத்தின் மீது அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடைபெறவிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் நடைபெறாத நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இயக்குனர் நெல்சன்-தளபதி விஜய்யை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி அளித்துள்ள தளபதி விஜய்யின், "விஜய் உடன் நேருக்கு நேர்" நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…