சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் நேற்று ஏப்ரல் 2ஆம் தேதி மாலை வெளியானது. ரகசிய RAW ஏஜெண்ட்டாக வீரராகவன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் செம ஸ்டைலாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரை காணும்பொழுது ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் பக்கா விஷுவல் ட்ரீட்டாக  இருக்குமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ராக்ஸ்டார் அனிருத் இசையில் பாடல்களும் ரிலீசுக்கு முன்பே வைரல் ஆகிவிட்டது.

தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று ஆரம்பம் முதலே வதந்திகள் பரவி வந்த நிலையில் வெளிவந்த ட்ரைலரில் அந்த சந்தேகம் தெளிந்தது.

எனவே பீஸ்ட் திரைப்படத்தின் வில்லன் யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் குறிப்பிடப்படும் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ஷாப்பிங் மாலில் பணயக் கைதிகளாக வைத்திருக்கும் வில்லன் கேங்கின் தலைவராக பீஸ்ட் திரைப்படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்ரைலரில் முகமூடி அணிந்த வில்லனின் புகைப்படத்தை தனது ஸ்டேட்டஸில் வைத்து ஷைன் டாம் சாக்கோ பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
shine tom chako as villain in thalapathy vijay in beast movie nelson