தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஆர்யா தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசமான நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அந்த வகையில் தற்போது இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் ஆர்யா நடித்து வருகிறார்.

கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3, மற்றும் எனிமி என ஆர்யா நடிப்பில் வெளிவந்த நான்கு படங்களும் வரிசையாக ஹிட்டடித்தது. முன்னதாக டெடி படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உடன் மீண்டும் இணைந்துள்ள ஆர்யா கேப்டன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

கேப்டன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கேப்டன் படத்திற்கு யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். 

கடந்த  சில வாரங்களுக்கு முன்பு கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக பெற்று வருகின்றன. இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஏப்ரல் 4ஆம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.