சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் நடைமுறையில் தற்போது உள்ள சொத்து வரி எவ்வளவு வசூக்கப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்படட நிலையில், அதன் தொடர்ச்சியாக, “இந்த சொத்து வரிகள் ஏன் உயர்த்தப்பட்டது?” என்பது குறித்தும், தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

அதன் படி,  “தமிழ்நாட்டில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 வது நிதி ஆணையமானது, தனது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என்றும், நிபந்தனைகள் விதித்து உள்ளதை, தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

 “பொருளாதார குறியீடுகள் உயர்ந்து உள்ள நிலையில், சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில், சொத்து வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாகவும்” தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

முக்கியமாக, “இந்தக் காரணங்களின் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக” தமிழ்நாடு அரசு, விளக்கம் அளித்தது.

ஆனாலும், தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தமிழகத்தின் எதிர் கட்சிகள் வரும் நாட்களில் சொத்துவரி உயர்வை கண்டித்து போராட்டங்களை அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு, தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் போராட்டத்தை அறிவித்து உள்ளன.

இதனால், சொத்து வரி உயர்த்தப்பட்ட தமிழகத்தை, இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் நடைமுறையில் தற்போது உள்ள சொத்து வரியை ஒப்பிடுகையில், எவ்வளவு ரூபாய் சொத்து வரியாக வசூக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு முறை முழுமையாக பார்க்கலாம்.

600 சதுர அடி குடியிருப்புக்கு குறைந்த பட்ச சொத்து வரி

- சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி குடியிருப்புக்கு குறைந்த பட்ச சொத்து வரி 1,215 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

- இதே பரப்பளவு உள்ள குடியிருப்புக்கு மும்பையில் 2,157 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

- இதே பரப்பளவு உள்ள குடியிருப்புக்கு புனேவில் 3,924 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

- இதே பரப்பளவு உள்ள குடியிருப்புக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3,464 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

- கொல்கத்தாவில் 3,510 ருபாய் வசூலிக்கப்படுகிறது.

அதாவது, சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்ச சொத்து வரியதனது 810 ரூபாயிலிருந்து 1215 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிக பட்ச சொத்து வரி

அதே போல், சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிக பட்ச சொத்து வரியாக 3,240 ரூபாயிலிருந்து 4,860 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு மும்பையில் - ரூ. 84,583.8

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு புனேவில் - ரூ. 17,112.6

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு கொல்கத்தாவில் - ரூ. 15,984

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு பெங்களூரில் - ரூ. 8,660.16  என்று வசூலிக்கப்படுகிறது.

1000 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்புக்கு சொத்து வரி

குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 1000 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிக பட்ச சொத்து வரியாக 9,045 ரூபாயிலிருந்து 13,568 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு மும்பையில் - ரூ. 1,40,973

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு புனேவில் - ரூ. 28521

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு கொல்கத்தாவில் - ரூ. 26640

- இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு பெங்களூரில் - ரூ. 14,433.6

என்று வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.