தோல்வியில் இருந்து மீள பஞ்சாப் அணியும் முதல் வெற்றியை பெற சென்னை அணியும் இன்று களம் காண்கின்றன.

#IPL2022 இன்றைய ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், தொடர் தோல்விகளில் இருந்து #CSK  மீளுமா என்றும், சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று 11 வது லீக் போட்டி நடைபெறுகிறது. அதன்படி நடைபெறும் இன்றைய போட்டியில், #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் - #PBKS பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் பலம் - பலவீனம்

#CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் மண்ணை கவ்விய நிலையில் தான், எப்படியாவது 2 வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் லக்னோ அணியுடன் மோதிய நிலையில், #CSK அணியில் சரியான பவுலர்கள் இல்லாமல், மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

#CSK அணிக்கு இந்த #IPL2022 சீசன் சற்று சொதப்பலாக அமைந்துள்ளது என்றாலும், தோனியின் சத்தமில்லாத புதிய சாதனை, மற்றும் அவர் புதிதாக ஃபார்முக்கு திரும்பியது ஆறுதலாக இருக்கிறது.

அதே நேரத்தில், ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை #CSK பிராவோ படைத்துள்ளது சென்னை அணிக்கு சாதகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தனது இந்த சாதனை குறித்து பேசிய பிராவோ, “சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும், அதற்காக தொடர்ந்து நான் உழைப்பேன்” என்றும், அவர் புதிய நம்பிக்கைத் தெரிவித்து உள்ளார்.

#CSK முதல் 2 போட்டியிலும் தோல்வி அடைய முக்கிய காரணம் பவுலிங் சரியாக இல்லாமல் இருந்ததே உண்மை. இந்த 2 போட்டியிலுமு #CSK அணியின் பவுலிங் சிறந்த பவுலர்கள் யாருமே இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

#CSK அணியின் முக்கிய பவுலர் தீபக் சாகர் இல்லாமல் இருப்பது, அணிக்கு பெரும் பலவீனமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

#CSK அணியின் சிறந்த பவுலரான ஆடம் மில்னே காயத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால், #CSK அணிக்கு பெரும் பின்னடைவாகவே இருக்கிறது.

அதே போல், மற்றொரு பவுலர் கிரிஸ் ஜோர்டன், உடல் நிலை சரியில்லாமல் அவரும் ஓய்வில் இருந்து வருகிறார்.

இதனால், #CSK அணியானது பவுலர்களே இல்லாமல் களமிறங்கி படுதோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் புதிய பவுலர்களை மிடில் ஓவர்களில் பந்து வீச வைக்க வேண்டிய கட்டாயத்தில் #CSK அணி இருக்கிறது.

முக்கியமாக, க்றிஸ் ஜோர்டான் இன்றைய போட்டியில் அணிக்கு திரும்பி வரும் பட்சத்தில், #CSK அணியின் பவுலிங் பிரச்சனை ஓரளவுக்கு தீரும் என்றே நம்பப்படுகிறது.

கடந்த #IPL2021 தொடரில் 16 போட்டிகளில் 635 ரன்களை குவித்து அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்த சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெக்வாட், இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்.

குறிப்பாக,, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 2 தொடக்க வீரர்களில் ஒருவர் கூட சரியாக விளையாடவிட்டால், #IPL2022 தொடரானது இன்னும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விடும்” என்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி #CSK வை எச்சரித்து உள்ளார்.

பஞ்சாப் அணியின் பலம் - பலவீனம்

அதே நேரத்தில், #PBKS பஞ்சாப் அணியானது தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வீழ்த்திய நிலையில், 2 வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது.

 #PBKS பஞ்சாப் அணியிடம், பலம் பொருந்திய பெங்களூரு அணியவே வீழ்த்தும் அளவுக்கு பலம் பொருந்தியதாக இருப்பதால், அந்த அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் என்று, இரண்டிலுமே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இப்படியாக, #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2 தோல்விகளை சந்தித்து, இப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சயத்துடனும், அதே போல்,  #PBKS பஞ்சாப் அணியானது தனது முதல் போட்டியில் வெற்றியும், 2 வது தோல்வியும் சந்தித்ததால், இப்படியாவது இதில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் இன்றைய தினம் களம் இறங்க காத்திருக்கின்றன.

ஓபனிங் இறங்கும் கேப்டன் மயங்க் அகர்வால் -  ஷிகர் தவான் இருவருமே நல்லா ஃபார்மில் இருக்கிறார். 

இன்றைய போட்டியில், டி 20 போட்டியில் 1000 பவுண்டரிகள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் ஷிகர் தவான் இன்று பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. என்றாலும், முப்பையில் அதிக அளவிலான பனி பொழிவு இருப்பதால், 2 வதாக பவுலிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.