தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் புதிய #AK62 திரைப்படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்திய திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். மேலும்  இளையதிலகம் பிரபு, கலா மாஸ்டர் ஆகியோருடன் இணைந்து பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.  சில தினங்களுக்கு முன்பு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்தது.

இதுவரை வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரிலீசுக்காக இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் கேரள ரிலீஸ் உரிமத்தை IFFAAR MEDIA நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.