அடுத்தடுத்து வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சக்கரவர்த்தியாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட வெற்றிக்கு தயாராகிவருகிறது தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம்.

கோலமாவு கோகிலா & டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடும் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட் படத்தில் இருந்து வெளிவந்த அரபிக் குத்து பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் பல சாதனைகள் படைத்த நிலையில் அடுத்து வெளிவந்த ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று (ஏப்ரல் 2ஆம் தேதி) மாலை வெளியானது.

பிரம்மிக்க வைக்கும் ஸ்டன்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பீஸ்ட் ட்ரைலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வெளியான நிமிடம் முதல் தற்போது வரை விடாமல் யூடியூபில் ட்ரெண்டாகி வரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் கடந்த 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களையும்  2.2 மில்லியன் லைக்குகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது. அசத்தலான பீஸ்ட் ட்ரைலர் இதோ…