பல கோடி இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களின் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் வாரிசு. முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார்

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் (தெலுங்கில் வாரசுடு) தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இதே பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு படமும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் பட்டித்தொட்டி எங்கும் பாட்டை கிளப்பி வைரல் ஹிட் ஆனது. இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷன் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…