இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களை வழங்கி ரசிகர்களை பிரமிக்க வைக்கும் இயக்குனர் ஷங்கர், கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்த 2.0 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒன்று உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2, மற்றொன்று ராம்சரண் நடிக்கும் RC15.

தடைகள் நீங்கி சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்தையும் சரியாக திட்டமிட்டு இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட RC15 திரைப்படத்தை தளபதி விஜயின் வாரிசு படத்தை தயாரிக்கும் தில் ராஜு அவர்கள் தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் RC15 திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக SJ.சூர்யா நடிக்கிறார். மேலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, நாசர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.முன்னணி ஒளிப்பதிவாளர்கள் திரு மற்றும் ரத்னவேலு இணைந்து ஒளிப்பதிவு செய்யும் RC15 திரைப்படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைக்கிறார். 

RC15 திரைப்படத்தின் முக்கிய பாடலின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நியூசிலாந்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் ஷங்கர், ராம்சரண் உட்பட குழுவினர் கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன அந்த புகைப்படங்கள் இதோ…
 

Team #RC15 #SVC50 wraps up a song shoot in New Zealand.
Mega powerstar @AlwaysRamCharan shares pictures from the sets and appreciates the efforts of the entire team...@shankarshanmugh @SVC_official @DOP_Tirru @MusicThaman @advani_kiara pic.twitter.com/9Rui7qsD41

— Sri Venkateswara Creations (@SVC_official) November 30, 2022