தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில்  ஒருவராகவும் இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரம் நாயகர்களில் ஒருவராகவும் விளங்கும் தளபதி விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரசுடு என வெளியாகிறது.

வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு வழக்கமாக நடைபெறும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் தளபதி விஜயின் வழக்கமான ஸ்பெஷல் இசை வெளியீட்டு விழா சிறப்புரை (Speech) மிஸ் ஆனது. எனவே இந்த முறை வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் மற்றும் அஜித்குமாரின் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகின்றன. அடுத்த ஆண்டு (2023)ஜனவரியில் பொங்கல் வெளியிடாக வாரிசு - துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸாகின்றன. இந்நிலையில் வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாரிசு திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் Phars Film Co LLC நிறுவனம் வாரிசு திரைப்படம் வெளிநாடுகளில் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் தமிழகத்திலும் இந்தியாவிலும் அதே தேதியில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என நம்பப்படுகிறது. இது குறித்து வாரிசு தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

The Boss Returns !!!#Varisu on Jan 12th!!! #varisupongal #Vijay @rashmika_mandanna pic.twitter.com/h6GP3NAKM8

— Phars Film Co LLC (@PharsFilm) November 30, 2022