ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கும் துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் ரிலீஸாகவுள்ளது. அதே பொங்கல் வெளியிடாக தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பொங்கலை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் அஜித்குமார் - போனி கபூர் H.வினோத் - நீரவ் ஷா கூட்டணியில் தயாராகி இருக்கும் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கல்யாண மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கும் துணிவு திரைப்படத்தில் துள்ளலான பாடலாக வெளிவர இருக்கும் சில்லா சில்லா பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக துணிவு படத்திற்காக அஜித்குமார் ஸ்டைலாக வைத்திருந்த வெள்ளை தாடியை தற்போது கிளீன் ஷேவ் செய்துவிட்டு அட்டகாசமான புதிய கெட்டப்பிற்கு மாறி இருக்கிறார். அஜித்குமாரின் இந்த புதிய கெட்டப்பின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படம் இதோ…
 

Happiness is witnessing #AK in clean shaven look ! #AjithKumar #AK #Ajith #Thunivu #ThunivuPongal2023 #Thunivutheatersrage pic.twitter.com/OaQQMQ3aVi

— Galatta Media (@galattadotcom) November 29, 2022