தமிழ் சினிமாவின் முன்னணிக்கு தான் நாயகர்களில் ஒருவராகவும் ஆகச்சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த விர்மன் பொன்னியின் செல்வன் மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹாட்ரிக் ஹிட்டாக வெற்றி பெற்றன. அடுத்ததாக இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜப்பான். 

கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில், GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமானட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. தனக்கே உரித்தான பாணியில் தரமான கதைக்களங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் தயாராவது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தற்போது அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஜப்பான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் அசத்தலான போஸ்டரும் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

Get Ready to witness the First Look of #Karthi in & as #Japan #JapanFirstLook #Karthi25 pic.twitter.com/36eTABSUVD

— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 12, 2022