தளபதி விஜயின் லியோ படப்பிடிப்பில் காதலர் தின கொண்டாட்டம்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் GLIMPSE இதோ!

லியோ படப்பிடிப்பில் த்ரிஷா காதலர் தின கொண்டாட்டம்,trisha valentines day celebration in leo movie shoot at kashmir | Galatta

இந்திய சினிமாவில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான கைதி மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் உருவாகியிருக்கும் LCU எனும் யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் உள்ள சில சின்ன சின்ன விஷயங்களை சேர்த்து லியோ படம் LCUல் இனிய வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் பலவிதமான தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் கைதி படத்தில் முக்கியமான நெப்போலியன் எனும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் தளபதி 67 படப்பூஜையில் கலந்து கொண்டதால் அவர் அதே கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் எனவே லியோ திரைப்படம் LCUல் கட்டாயம் இடம் பெறும் என்றும் பலவிதமான எதிர்பார்ப்புகள் நிலவு வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ நம்ப தகுந்த தகவல்களோ மிக விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில், அடுத்த கட்டமாக தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து வருகின்றனர். முன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு சென்ற திரிஷா ஒரு சில நாட்களில் அங்கிருந்து வெளியேறியதால், படத்திலிருந்து வெளியேறியதாக வதந்திகள் பரவிய நிலையில், மீண்டும் படபிடிப்புக்கு சென்று காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். இதனிடையே தற்போது உலகம் முழுவதும் காதலர் தினத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், காஷ்மீரில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார். ஒப்பனை கலைஞர்களோடு தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு காதலர் தினத்தை கொண்டாடுவதாக திரிஷா தெரிவித்துள்ளார்.  நடிகை திரிஷா லியோ படத்தின் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட்டில் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
ulaganayagan kamal haasan valentines day wishes tweet

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படம் கோல்ட் மாஃபியாவா..? சுவாரசியமான பதிலளித்த பிரபல இயக்குனர்! வீடியோ இதோ
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படம் கோல்ட் மாஃபியாவா..? சுவாரசியமான பதிலளித்த பிரபல இயக்குனர்! வீடியோ இதோ

பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜின் வாழ்த்து! விவரம் உள்ளே
சினிமா

பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜின் வாழ்த்து! விவரம் உள்ளே

திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த அதிரடி படைப்பு... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த அதிரடி படைப்பு... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!