தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டு தென்னிந்திய திரை உலகின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாகவும் வலம் வரும் தளபதி விஜய் தனது பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை முறியடிக்கும் வகையில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் வாரிசு. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ள, வாரிசு திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.  வழக்கமாக நடைபெறும் தளபதி விஜயின் இசை வெளியீட்டு விழாவும், விஜயின் குட்டி ஸ்டோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காணக் கிடைக்காத நிலையில், இம்முறை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

நாளை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கான ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தளபதி விஜயின் மாஸான அந்த போஸ்டர் இதோ…
 

#Varisu Audio out on Dec 24th at 4PM 🔥🔥#VarisuAudioLaunch #VarisuALonDec24#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/kqTaftBGzj

— Sri Venkateswara Creations (@SVC_official) December 22, 2022