தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மாயா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கனெக்ட் திரைப்படம் இன்று டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில், கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். 

இடைவேளை இல்லாத முழு நீள 99 நிமிட திரைப்படமாக வெளிவந்துள்ள கனெக்ட் திரைப்படம் அனைரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் ரசிகர்களின் ஃபேவரிட் தொகுப்பாளர்களில் ஒருவரான DD(எ) திவ்யதர்சனியின் சிறப்பு பேட்டியில் பேசிய நடிகை நயன்தாரா தனது துணை பயணத்தின் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் அஜித்தின் பில்லா படத்தில் தனது கிளாமர் TRANSFORMATION குறித்து பேசினார்.

அப்படி பேசுகையில், "பில்லா பண்ணும் போது யாருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை.. அதுவரை யாரும் என்னை அவ்வளவு கிளாமர் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் பார்த்ததில்லை. அதுவரை ஹோம்லியான அல்லது கிராமத்து கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தேன்.. அந்த நேரத்தில் இயக்குனர் விஷ்ணு ஒருவன் தான் என் மீது மிகுந்த நம்பிக்கையாக இருந்தார். இந்த பெண் இதை செய்ய முடியும் என்ன நம்பினார். மற்றும் அனு என்னுடைய நண்பர் விஷ்ணுவர்தனின் மனைவி அவரும் நான் இதை செய்ய முடியும் என மிகவும் நம்பினார். அவர்களுடைய ஆடை வடிவமைப்பு தான் அந்த பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது மேலும் அந்தப் படம் படமாக்கப்பட்ட விதம் அந்தத் தருணத்தில் நான் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் என்னால் இதுவும் செய்ய முடியும் என... பொதுவாகவே எனக்கு யாராவது என்னால் இதை செய்ய முடியாது என சொன்னால் அது கொஞ்சம் உருத்திக் கொண்டே இருக்கும். என்னால் அது பண்ண முடியுமே நான் கொஞ்சம் செய்து காட்டுகிறேன்... இது திமிர் அல்ல இது நமக்குள் இருக்கும் ஒரு நம்பிக்கை தான்" என நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாராவின் அந்த பேட்டி இதோ…