அடுத்தடுத்து பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்து இன்றைய சினிமாவின் உச்ச நட்சத்திர இயக்குனராக உயர்ந்திருக்கும் SS.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1-2 திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் படைத்த வசூல் சாதனை படைத்தது.இதனைத் தொடர்ந்து கடைசியாக SS.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள RRR படத்தை DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ளார். 1100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்த RRR திரைப்படம் சமீபத்தில் ஜப்பானிலும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

மேலும் அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுகளில் அனைத்து பிரிவுகளிலும் RRR திரைப்படத்தை படக்குழுவினர் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம் பிடித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த 50 திரைப்படங்களின் பட்டியலில் இந்திய திரைப்படங்களாக SS.ராஜமௌலியின் RRR மற்றும் டாக்குமென்டரி திரைப்படமான All That Breathes ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் RRR திரைப்படம் டாப் 10 இல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.