தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடைசியாக 2021 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது,விஜய் பூஜா ஹெக்டே போன்றோர் தங்கள் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டனர்.சில பேட்ச் காட்சிகளின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.நெல்சன்,அனிருத்,சிவகார்த்திகேயனுடன் போனில் விஜய் பேசுவது போல ஒரு ப்ரோமோவை சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது ஒரு புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.