“அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு முடிவு எடுத்ததாக தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவருக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக செபி உத்தரவு” பிறப்பித்து உள்ளது.

பங்கு சந்தையில், பல்வேறு தொழில் அதிபர்களும், தொழில் முனைவோர்களும் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். 

இது மட்டும் இல்லாமல், நடுத்தர வர்க்கனத்தினர் உட்பட இளம் வயது உடைய சாதரன மனிதர்கள் வரை பலரும் தேசிய பங்கு சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். எனினும், இதில் லாபம் - நஷ்டம் என்பது மாறி மாறி வந்தாலும், இதில் நஷ்டம் அடைந்தவர்கள் அதிக அளவில் மீண்டும் எழ முடியாத அளவுக்கு தான், அதன் வீரியம் இருந்துக்கொண்டு இருப்பதாக கடந்தகால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த நிலையில் தான், அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தேசிய பங்கு சந்தையின் முக்கிய முடிவுகளை NSE-யின் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா மேற்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, “NSE எனப்படும் தேசிய பங்கு சந்தை நிறுவனர்களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. 

இவர், NSE யின் நிர்வாக இயக்குனராக இருந்த கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் இவர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, தொடர்ந்து பல விதமான சர்ச்சைகள்” எழுந்தது.

இப்படியாக, அடுத்து தொடர்ந்து சிர்ச்சைகள் எழுந்த நிலையில், தேசிய பங்கு சந்தை நம்பகத் தன்மை சந்தேகத்தை ஏற்படுத்தின.

இதனால், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட பங்கு வர்த்தனை வாரியமான செபி அமைப்பு, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் தான், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விசாரணையில், “தேசிய பங்கு சந்தை பங்கு சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு முக்கிய முடிவுகளை அடையாளம் தெரியாத சாமியாரின் ஆலோசனைப்படியே சித்ரா ராமகிருஷ்ணா எடுத்து வந்தார்” என்பது தெரிய வந்தது. 

அதுவும், “இமயமலையில் இருப்பதாக கூறப்படும் அந்த பெயர் தெரியாத சாமியாரின் ரிக், யஜூர், சாம என்ற 3 வேதங்களின் பெயரில் அமைந்து உள்ள இ மெயில் கணக்கிற்கு, தேசிய பங்கு சந்தை பங்குச்சந்தை நிர்வாகம் தொடர்பான தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணா அனுப்பி வந்ததும்” தெரிய வந்துள்ளது. 

மேலும், “அதே மெயில் கணக்கில் இருந்து, ஆலோசனை கிடைத்த பிறகு அதன் படியே சித்ரா ராமகிருஷ்ணா முடிவுகள் எடுத்து வந்து உள்ளதாகவும்” செபி தனது விசாரணையின் முடிவில் தெரிவித்து உள்ளது.
 
இப்படியாக, பெயர் தெரியாத ஒரு சாமியாரின் வழிகாட்டுதல் படி, கடந்த 2013 ஆம் ஆண்டின் NSE ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனுக்கு, அடுத்தடுத்து 3 சம்பள உயர்வு அளித்து 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாகவும்” செபி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து, “சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாயும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு 2 கோடி ரூபாயும் அபராதம் விதித்து உள்ள செபி, இரு வரும் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் எதிலும் ஈடுபட கூடாது” என்றும், அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.