ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முறைப்படி திருமணம் செய்ய உள்ளார். இது தொடர்பான அவர்களது திருமண பத்திரிகை தற்போது டிரென்டாகி வருகிறது.

இந்தியாவில் ஐபிஎல் மெகா ஏலம், 2 வது நாளாக மிகவும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. 

என்றாலும், நேற்றைய தினம் முதல் நாளில் ஐபிஎல் ஏலம் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் கல்யாண பேச்சு தான் இணையம் முழுக்க பரவி கிடந்தன. 

அதவும், மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை இணையத்தில் பெரும் வைரலாகிக்கொண்டிருக்கிறது. அதுவும், அப்படியே தமிழ் பாரம்பரியப்படி தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டது தான் இந்த வைரலுக்கு ஒரு முக்கிய காரணம். 

அதாவது, ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான கிளென் மேக்ஸ்வெல், ஸ்பின் பவுலராகவும் வலம் வருகிறார்.

மேக்ஸ்வெல், கடந்த முறை ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, இந்த முறை ஐபிஎல் ஏல போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சரஸ் அணி, இவரை 11 கோடிக்கு அவரை ஏலம் எடுத்து தக்க வைத்து கொண்டது.

இந்த சூழலில் தான், கிளென் மேக்ஸ்வெல்லும் - ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினி ராமனும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால், கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தமும் அவர்களுக்கு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸ் தொற்று, அதன் மூலமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளால் இவர்களுடைய திருமணமானது, இன்னும் தள்ளி போனது. 

இந்த நிலையில் தான், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இவர்கள் இருவருக்கும் வரும் மார்ச் 27 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் காலை 11.35 மணிக்கு மேல் 12.35 மணிக்குள்ளாகரிஷப லக்கினத்தில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களது திருமணத்திற்காக தற்போது மஞ்சள் பத்திரிகை அடிக்கப்பட்டு உள்ளது. அதுவும், தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண பத்திரிகையானது, தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் பெண்ணான வினி ராமன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வளர்ந்து வரும் நிலையில், மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்து உள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தான், மேக்ஸ்வெல்லுக்கும் - வினி ராமனுக்கும் முதல் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகு எதேச்சையாக இவர்கள் இருவரும் அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டு உள்ளார்கள். அப்போது தான், அவர்கள் இருவருக்குள்ளும் அந்த காதல் பூ பூத்திருக்கிறது.

இப்டபியாக, அடுத்தடுத்து எதேச்சையாக அவர்கள் இருவரும் சந்திப்புகள் நடந்த நிலையில், இருவரும் முதலில் நண்பர்களாக்கி உள்ளனர். 

இப்படியாகவே, 4 ஆண்டுகள் கடந்து செல்ல கடந்த 2017 ஆம் ஆண்டு “டேட் செய்யலாமா?” என்று, மேக்ஸ்வெல் கேட்க, வினி ராமனும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்த டேட்டிங் அவர்களுக்குள் நன்றாக சென்ற நிலையில், தன்னுடைய காதலை மேக்ஸ்வெல் அப்போது வினி ராமனிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்போது, தமிழ் பெண்களுக்கே உரித்தான பாணியில் சில நாட்கள் இழுத்தடித்து வந்த தமிழ் பெண் வினி ராமன், கடைசியாக மேக்ஸ்வெல்லின் காதல் வலையில் விழுந்து, காதலுக்கு சம்மதம் சொல்லி உள்ளார்.

அதன் பிறகே இரு வீட்டாருக்கும் இவர்களது காதல் விவகாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவர் வீட்டிலும் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டு, தற்போது இரு வீட்டார் முறைப்படி அவர்களுக்கு மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.