மேற்கு வங்க சட்ட சபையை முடக்கிய அந்த மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து உள்ளார்.

அதாவது, மேற்கு வங்க மாநிலத்தில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே தொடர்ந்து மோதல்  போக்கே நிலவி வருகிறது.

இந்த மோதல் போக்கானது, அம்மாநிலத்தில் தொடர்ந்து கொண்டே வருவதால் “மேற்கு வங்க மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான மசோதாக்களுக்கு அந்த மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும்” மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டே வந்தார்.

இதன் காரணமாக, “மாநில மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்” என்று, மம்தா பானர்ஜி  வலியுறுத்தி, உரக்க குரல் கொடுத்து வந்தார். 

அத்துடன், மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடிக்க்கொண்டே வந்தார்.

இந்த சூழலில் தான், வர உள்ள மேற்கு வங்க சட்டசபை கூட்டத் தொடரில், “இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து, பரிசீலித்து வருவதாக” அம்மாநில சட்ட மன்ற விவகார துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், மேற்கு வங்க அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு உச்சம் பெற்றது நின்றது. 

இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பமாக ஆளுநர் ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க சட்ட மன்றத்தை திடீரென தற்போது முடக்கி உள்ளார்.

அத்துடன், அரசியல் நிர்ணய சட்ட பிரிவு 174 அடிப்படையில், மேற்கு வங்க சட்டப் பேரவை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி மூடுவதாக ஆளுநர் அறிவித்து உள்ளார். 

இது குறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அரசியலமைப்பின் 174 வது பிரிவின் (2) உட்பிரிவின் (a) உட்பிரிவின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநரான ஜக்தீப் தன்கர், மேற்கு வங்காள சட்டமன்றத்தை இதிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கிறேன்” என்று, அறிவித்து உள்ளார்.

இதனால், மேற்கு வங்க அரசு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது. 

மேலும், அம்மாநில ஆளுநரின் இந்த செயலுக்கு இந்திய அளவில் தொடர்ந்து கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்து உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பாஜக அரசின் அத்து மீறலுக்கு எதிராக மிக கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. 

இந்த நிலையில் தான்,  மேற்குவங்க சட்டப் பேரவையை முடக்கிய ஆளுநரின் இந்த கடுமையான செயலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிக கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மேற்கு வங்க ஆளுநரின் சட்டமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானக அமைந்துள்ளது” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

அத்துடன், “அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் 'குறியீட்டு' தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது” என்றும், தனது கண்டனத்தை இவ்வாறாக பதிவு செய்து உள்ளார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மேற்கு வங்க ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.