தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகி அடுத்து ரிலீசுக்கு ரெடி ஆகி வரும் படம் பீஸ்ட்.இந்த படத்தினை கோலமாவு கோகிலா,டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்,துள்ளலான வரிகளுடன் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்தது இந்த பாடல்.

இந்த பாடலின் ஒரு சில புதிய மேக்கிங் ஷாட்களை சேர்த்து சன் NXT மற்றும் சன் மியூசிக்கில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.இதனை கவனித்த ரசிகர்கள் அடடே இதையெல்லாம் யூடியூப் வெர்ஷனிலும் வெச்சுருக்கலாமே என்று தெரிவித்து வருகின்றனர்.தற்போது சன் பிக்சர்ஸ் தங்கள் யூடியூப் வெர்ஷனிலும் புதிய ஷாட்டுகளை அப்டேட் செய்துள்ளனர்.

Arabic Kuthu Song Sun Nxt Version