தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

 இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் தள்ளிப்போன இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.இந்த படத்தில் உதவி இயக்குனராக பிரபல நடிகரான கவின் வேலை பார்க்கிறார்.புகழுடன் புதிய வீடியோ வெளியிட்டுள்ள கவின் அதில் ஷூட்டிங்கில் விஜயுடன் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

டெஸ்ட் ஷூட்டிங்கின் போது இருந்தே அனைவரிடமும் பேசி செம ஜாலியாக இருந்தார் தளபதி விஜய்.படத்தின் பூஜையின் போது தனது அஸ்கு மாறோ பாடலை ரசித்ததாக விஜய் சொல்லியதாகவும் , போட்டோ எடுக்கும் போது தன்னை அருகில் அழைத்து நிராகவைத்ததாகவும் சில சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார் கவின்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.