தளபதி 66 ஷூட்டிங் குறித்து இயக்குனர் வம்சி கொடுத்த சூப்பர் தகவல் !
By Aravind Selvam | Galatta | April 15, 2022 11:22 AM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.
தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
பாடல் ஷூட்டிங்குடன் இந்த படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட வம்சி.இந்த படம் குறித்த ஒரு ருசிகர தகவலை பகிர்ந்துள்ளார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஒரு நல்ல படத்தினை நிச்சயம் தருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Director #VamshiPaidipally about @ThaIapathy66Off ❤️#Thalapathy66 #Vijay66 #దళపతి66 #தளபதி66 @actorvijay @iamRashmika @directorvamshi pic.twitter.com/VXgSG7bnXA
— #Thalapathy66 (@ThaIapathy66Off) April 14, 2022
'Thalapathy' Vijay's Beast OPENING and COLLECTIONS - Official statement is here!
13/04/2022 05:05 PM