தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் மீண்டும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான்-சிலம்பரசன்.TR கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் படத்திலும் சிலம்பரசன்.T.R நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரபல OTT தளமான aha தமிழ் OTT தளத்தின் விளம்பர படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR ஆட்டோக்காரர் வேடத்தில் நடித்துள்ளார். சிலம்பரசன்.TR-ன் அந்த விளம்பரப் பட வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரென்டாகி வருகிறது. அந்த விளம்பரப் பட வீடியோ இதோ…