தமிழ் சினிமா ரசிகர்களின் "தல" நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில்  உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும்  தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா , யோகி பாபு மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், நீரவ்ஷா ஒளிப்பதிவில் தயாராகும் அதிரடி திரைப்படமான வலிமை படத்தில் திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக வெளியான வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், நாங்க வேற மாறி என்னும் முதல் பாடல் மற்றும் Glimpse ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏறப்படுத்தியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தல அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவின் வாகா எல்லையில், தல அஜித்குமார் இந்திய ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.