கடந்த சில வருடங்களாக சமூகவலைத்தளங்களின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.தங்கள் திறமையை அவர்களுடைய பக்கங்களில் வெளிப்படுத்தி பலரும் பலனடைந்துள்ளனர்.அப்படி பல நடிகர்கள் நடிகைகளை உலகிற்கு காட்டியது டிக்டாக்.இதன் மூலம் பலரும் ரசிகர்களை எண்டெர்டைன செய்து வந்தனர்.

டிக்டாக் மூலம் 2016-ல் பிரபலமான ஒருவர் ஷோபனா , டிக்டாக் இருந்த காலத்திலேயே செம ட்ரெண்டிங்காக இருந்தார்.இன்ஜினியரிங் முடித்து வேலைபார்த்து வந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதான ஆர்வத்தினால் டிக்டாக் செய்து வந்தார் அதில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வந்தார் ஷோபனா.

இன்ஸ்டாகிராமில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஆல்பம் பாடல்கள்,குறும்படங்கள்,வெப் தொடர்கள் போன்றவற்றில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தார் ஷோபனா,அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் தொடரில் நாகம்மன் என்ற முக்கியமான சிறு வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இந்த தொடர் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஷோபனா.

தனது உழைப்பால் படிப்படியாக முன்னேறிய ஷோபனா,தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.முத்தழகு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.டிக்டாக்கில் தொடங்கி முன்னணி தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியின் நாயகியாக வளர்ந்துள்ள இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக ஷோபனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.