தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் மாநாடு. முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, S.A.சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ள மாநாடு படத்தில் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

V HOUSE புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ள மாநாடு திரைப்படம் முன்னதாக தீபாவளி வெளியீடாக நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அக்டோபர் 18-ஆம் தேதியும் மாநாடு தீபாவளி ரிலீஸில் இருந்து விலகுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அறிவித்தார்.

எனவே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி அமரன் மாநாடு  படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக  தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு தெரிவித்துள்ளார்.அந்த புகைப்படம் இதோ...