நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில்  வெளியான ராட்சசன், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களின் மூலமாக தமிழில் மிகவும் பிரபலம் அடைந்த நடிகை அம்மு அபிராமி,

இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில்  நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். சில நாட்கள் முன்பு அம்மு அபிராமி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டார்.

காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்ட அம்மு அபிராமிக்கு கொரோனா உறுதியானது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அம்மு அபிராமி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் . இப்போது மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அம்மு அபிராமிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. 

 

இதனால் தான்  கொரோனாவில் இருந்து மீண்டு  வந்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அம்மு அபிராமி தான் கொரோனா  தொற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். கடவுளுக்கும் தான் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அனைவரின் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும் முகக் கவசம் அணியும் படியும் தன் பதிவில்  கேட்டுக்கொண்டுள்ளார்.சமீபத்தில் பிரபல தென்னிந்திய நடிகையான பூஜா ஹெக்டே  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் நடிகை அம்மு அபிராமி  கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.