சூர்யா - ஜோதிகாவின் ஐரோப்பா ட்ரிப்... மகள் - மகனோடு கோடை விடுமுறை கொண்டாட்டம்! வைரலாகும் VACATION வீடியோ இதோ

குடும்பத்தோடு ஐரோப்பாவில் VACATION சென்ற சூர்யா ஜோதிகாவின் வீடியோ,Suriya jyothika europe vacation with their kids dhiya and dev | Galatta

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் தங்களது மகள் மற்றும் மகனோடு இணைந்து கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் சென்று வந்த வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா தற்சமயம் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்தக் கங்குவா திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் பக்கா பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே அமேசான் பிரைம் வீடியோவில் தென்னிந்திய மொழிகளில் இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத பெரிய தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கும் கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சூரரைப் போற்றுப் படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதாகர் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துவரும் புதிய படத்தில் முக்கிய கவுரவ வேடத்தில் நடித்த சூர்யா அடுத்ததாக முதல் முறை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக காளை ஒன்றை அனிமேட்ரானிக்ஸ் முறையில் ரோபோவாக பட குழுவினர் உருவாக்கி வருகின்றனர் என்பது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் வாடிவாசல் திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதால், விடுதலை பாகம் 2 படத்தின் ரிலீஸுக்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

36 வயதினிலே திரைப்படத்திலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நடிகை ஜோதிகா தொடர்ச்சியாக கதாநாயகிகளை முன்னிறுத்தக்கூடிய தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஸ்ரீ எனும் மலையாள படத்தில் தற்போது நடித்துவரும் நடிகை ஜோதிகா முன்னதாக மலையாள சினிமாவின் நட்சத்திர நாயகர் மம்முட்டி அவர்களோடு இணைந்து காதல் - தி கோர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். விரைவில் காதல் - தி கோர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கப்புலான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் குடும்பத்தோடு வெக்கேஷன் சென்று வந்துள்ளனர். தொடர்ந்து பிசியாக தங்களது திரைபயணத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது தங்களது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் இணைந்து ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளனர். அட்டகாசமான இயற்கை எழில் கொஞ்சும் அழகழகான பகுதிகளுக்கு குடும்பத்தோடு சென்று வந்த இந்த ஜாலியான சுற்றுப்பயணத்தின் வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நடிகை ஜோதிகா வெளியிட்டு இருக்கும் இந்த INSTAGRAM வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பில் கொண்டாட்டம்... அதிரடி அறிவிப்புடன் வந்த Shooting Spot GLIMPSE இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பில் கொண்டாட்டம்... அதிரடி அறிவிப்புடன் வந்த Shooting Spot GLIMPSE இதோ!

விறுவிறுப்பான கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... மாளவிகா மோகனன் பகிர்ந்த சர்ப்ரைஸ் புகைப்படங்கள் இதோ!
சினிமா

விறுவிறுப்பான கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... மாளவிகா மோகனன் பகிர்ந்த சர்ப்ரைஸ் புகைப்படங்கள் இதோ!

'மாற்றம் நடக்குதோ.. இல்லையோ..!'- தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே
சினிமா

'மாற்றம் நடக்குதோ.. இல்லையோ..!'- தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே