காமெடி சரவெடியாக வரும் அனுஷ்காவின் கம் பேக் படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி… ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,Anushka in miss shetty mr polishetty movie release date announcement | Galatta

மக்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவராக திகழும் நடிகை அனுஷ்கா நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கி, தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகியாக உயர்ந்த அனுஷ்கா கதாநாயகிகளை முன்னிறுத்தும் சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். 

அந்த வகையில் அனுஷ்காவின் திரை பயணத்தில் மைல்கல்லாக பக்கா ஆக்ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக வெளிவந்த அருந்ததி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அனுஷ்காவை இந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகியாக உயர்த்தியது. அருந்ததி படம் போலவே பஞ்சாக்ஷ்ரி, சந்திரமுகியின் தெலுங்கு வெர்ஷனாக நாகவல்லி, ருத்ர மாதேவி ஆகிய படங்களில் வரிசையாக நடித்த அனுஷ்கா, மறுபுறம் தமிழில் தளபதி விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் 1,2&3 , சீயான் விக்ரமுடன் தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா, அஜித் குமார் உடன் என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கினார். 

பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இந்திய சினிமாவின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களாக எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாகுபலி 1&2 திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த அனுஷ்கா கடைசியாக நடித்த பாகமதி திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசானது. இதனைத் தொடர்ந்து மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது.  அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அனுஷ்காவின் புதிய திரைப்படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது.

தனது திரைப்பயணத்தில் 48வது படமாக இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்கத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா மற்றும் ஜாதி ரத்தினலு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்திற்கு கோட்டாகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். UV CREATIONS மற்றும் STUDIO GREEN ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க பக்கா கமெடி என்டர்டெய்னராக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

 

Keep your tissues ready, cos you're about to cry with 𝙇𝙖𝙪𝙜𝙝𝙩𝙚𝙧 🤩🥳

Meet #MissShettyMrPolishetty in theatres from 𝘼𝙐𝙂𝙐𝙎𝙏 4𝙩𝙝! @UV_Creations @StudioGreen2 @MsAnushkaShetty @NaveenPolishety @filmymahesh @radhanmusic #NiravShah #RajeevanNambiarpic.twitter.com/iyWxwAf7fR

— Studio Green (@StudioGreen2) July 3, 2023

விறுவிறுப்பான கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... மாளவிகா மோகனன் பகிர்ந்த சர்ப்ரைஸ் புகைப்படங்கள் இதோ!
சினிமா

விறுவிறுப்பான கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... மாளவிகா மோகனன் பகிர்ந்த சர்ப்ரைஸ் புகைப்படங்கள் இதோ!

'மாற்றம் நடக்குதோ.. இல்லையோ..!'- தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே
சினிமா

'மாற்றம் நடக்குதோ.. இல்லையோ..!'- தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே

சிவகார்த்திகேயனின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னர் கேரண்டி… ரசிகர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாவீரன் பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னர் கேரண்டி… ரசிகர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாவீரன் பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!