'இது சாகச சவாரி தான்!'- கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்

கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட புகைப்படம்,cinematographer ravi varman about indian 2 movie | Galatta

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.O திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வரும் அடுத்த படைப்புக்காக இந்திய அளவில் பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் அத்தனை ரசிகர்களுக்கும் அடுத்தடுத்த ட்ரீட் கொடுக்கும் வகையில் தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 ஆகிய படங்களை ஷங்கர் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். தொடர்ந்து அந்நியன் திரைப்படத்தை பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ரீமேக் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்களில் நடிக்க இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்தில் திரைக்கதை எழுதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே இந்தியன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணி இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு தடை பட்ட நிலையில் தற்போது தடைகள் நீங்கி மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகி நடிக்கும், இந்தியன் 2 படத்தில் சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 

இந்த நிலையில், அந்நியன் , வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், ஏழாம் அறிவு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தனது ஒளிப்பதிவால் மற்றொரு தளத்திற்கு உயர்த்திய ரவிவர்மன் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் தற்போது ஒளிப்பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஷங்கரோடு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தற்போது காலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரவிவர்மன் "இந்தியன் 2 திரைப்படம் ஒரு சாகச சவாரி தான்" என குறிப்பிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் இந்த பதிவால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கின்றனர். ரவிவர்மன் அவர்களின் அந்த பதிவு மற்றும் புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Ravi Varman (@r_varman_)

'மாற்றம் நடக்குதோ.. இல்லையோ..!'- தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே
சினிமா

'மாற்றம் நடக்குதோ.. இல்லையோ..!'- தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே

சிவகார்த்திகேயனின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னர் கேரண்டி… ரசிகர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாவீரன் பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னர் கேரண்டி… ரசிகர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாவீரன் பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

ஷாரூக் கானின் ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த அதிரடி பாலிவுட் படம்... ரிலீஸ் தேதியுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ஷாரூக் கானின் ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த அதிரடி பாலிவுட் படம்... ரிலீஸ் தேதியுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!